யாழுக்கு ரணில் விஜயம்

357 0

முன்னாள் பிரதமரும் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க, வியாழக்கிழமை (23) யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.

இதன்போது, யாழ்ப்பாணத்தில் ஐக்கிய தேசிய கட்சி சார்பில் போட்டியிடும் விஜயகலா மகேஸ்வரனுக்கு ஆதரவாகப் பிரசாரத்தில் ஈடுபடவுள்ள அவர், யாழ்ப்பாணம் மாவட்டத்தில் உள்ள சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள், மதகுருமார்கள், கல்வியாளர்களுடனான சந்திப்பையும் மேற்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.