யாழ்ப.ருத்தித்துறை பிரதான வீதியில் வாகனம் குடைசாய்வு

331 0

article_1479964450-img_2356யாழ்ப்பாணம் – பருத்தித்துறை பிரதான வீதியின் சிறுப்பிட்டி பகுதியில் குடைசாய்ந்ததில் வாகனத்தில் ஏற்றிவந்த பெறுமதியான பொருட்கள் சேதமடைந்தன. இச் சம்பவம், நேற்றுப் புதன்கிழமை (23) மாலை, சிறுப்பிட்டி அரசினர் தமிழ்கலவன் பாடசாலைக்கு அருகில் இடம்பெற்றுள்ளது. நெல்லியடியிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு மாபிள்கற்களை ஏற்றி வந்த போது, அதிகளவு பொருட் சுமையினால் வாகனம் குடைசாய்ந்தமையினால் பல இலட்சம் ரூபாய் பெறுமதியான பொருட்சேதம் எற்பட்டுள்ளன. தென்னிலங்கைப் பகுதியினைச் சேர்ந்த தனியார் மாபிள் நிறுவனம் ஒன்றின் வாகனமே இவ்வாறு, வளைவொன்றில் திரும்பும் போது குடை சாய்ந்தது.