இ-சேவை மையத்தில் ஓய்வூதியதாரர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும்

258 0

201611241104071729_e-service-center-issued-certificate-to-pensioners_secvpfஇ-சேவை மையத்தில் ஓய்வூதியதாரர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும் என்று தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி நிறுவனம் தமிழகம் முழுவதும் 486 அரசு இ-சேவை மையங்களை அமைத்து அரசின் பல்வேறு துறைகள் சார்ந்த சேவைகளை வழங்கி வருகிறது.

தற்பொழுது, கூடுதல் சேவையாக இன்று முதல் ஓய்வூதியதாரர்களுக்கு மின்னணு வாழ்வு சான்றிதழ் வழங்கும் சேவை துவக்கப்படவுள்ளது. மின்னணு வாழ்வு சான்றிதழ் பெற விரும்பும் ஓய்வூதியதாரர்கள், இந்நிறுவனத்தின் இ-சேவை மையத்தில் தங்களது ஆதார் எண்ணை தெரிவித்து, கைவிரல் ரேகையைப் பதிவு செய்து, ஓய்வூதியம் தொடர்பான தகவல்களை தெரிவித்தால், அவர்களுக்கு மின்னணு வாழ்வு சான்றிதழ் அச்சிட்டு வழங்கப்படும். இதற்கு சேவைக் கட்டணமாக ரூ.10/-வசூல் செய்யப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.