வர்த்தக மானி அறிவித்தல் வெளியிடாவிட்டால் தேர்தலை நடத்துவது மிகவும் கடினம்

384 0

தேர்தலுக்கு முன் சுகாதார வழிகாட்டுதல்கள் தொடர் பான வர்த்த மானி அறிவித்தல் வெளியிடாவிட்டால் தேர்தலை நடத்துவது மிகவும் கடினம் எனத் தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

தேர்தல் தொடர்பாக வன்னி மாவட்ட செயலகத்தில் மேலும் தெரிவித்ததாவது,

தேர்தல் பிரசாரத்தின் போது கடைப்பிடிக்க வேண்டிய சுகாதார ஆலோசனைகள் குறித்த வழிகாட்டுதல்களை உடனடியாக வர்த்தமானியில் வெளியிடுமாறு தகுதி வாய்ந்த அதிகாரிகளிடம் கேட்டுக்கொள்கிறேன்.

அத்தோடு, சுகாதார வழிகாட்டுதல் தொடர்பான வர்த்தமான அறிவித்தலை வெளியிடாவிட்டால் தேர்தலை நடத்துவது மிக கடினம் அவதாவது, முகத்துக்கு முகக் கவசம் அணிதல், கைகளைக் கழுவி ஒரு மீற்றர் தூரத்தில் விலகி இருக்குமாறு பொதுமக்களுக்குச் சொல்வதில் எந்தவித அர்த்தமும் இல்லை. இதனை வர்த்தமானியில் வெளியிடுவது கட்டாயமாகும் என அவர் தெரிவித்தார்.

அது போல தான் இப்போது, கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக ராஜங்கனாயில் உள்ள அரசு அலுவல கங்களின் தனிமைப்படுத்தல் காரணமாக ராஜாங் கனைப் பிரதேசத்தின் தபால் மூல வாக்குப் பதிவுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

எனவே இதை நிர்வகிப்பது எங்களுக்குக் கடினம். மற்ற விடயம் என்னவென்றால், அந்த பகுதியில் உள்ள சுகாதார அதிகாரிகள் மற்று பொதுச் சுகாதார ஆய்வாளர்களை சுய தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளை எடுப்பதற்கும் நாங்கள் அந்த மக்களுக்குச் சேவை செய்ய வேண்டி இருப்பதால் எங்களுக்கு அவர்களின் தபால் மூல வாக்களிப்புகளை நிர்வகிப்பது கடினம்.

வேறு அரச அலுவலகங்களில், சுகாதார வழி காட்டுதல்களின்படி தபால் மூல வாக்களிப்பு நடை பெறுமா? இல்லையா, என்பதை நிர்வகிப்பதில் சிரமம் இருந்ததால் ராஜாங்கனைப் பிரதேசத்தின் தபால் மூல வாக்குப் பதிவுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

14 நாட்களுக்குப் பிறகு பாதுகாப்பு உறுதி செய்யப்பட்ட பின்னர் ராஜாங்கனைப் பிரதேசத்தின் தபால் மூல வாக்களிப்பு இடம்பெற வாய்ப்புள்ளது.

இறுதியாக, கோவிட்-19 இரண்டாவது அலை கொரோனா வைரஸ் தொற்று பரவும் அபாயத்தை நாங்கள் நம்ப வில்லை அத்தோடு நாங்கள் அது தொடர்பான ஆபத்தைத் தவிர்க்கத் தேவையான சகல நடவடிக்கைகளை முன் னெடுத்து வருகின்றோம் தேர்தல்களை நடத்து வதற்குத் தடையாக இருக்காது என்று நாங்கள் நம்புகிறோம்.

சுகாதார ஆலோசனையையும் சமூக தூரத்தையும் பின்பற்றுவதன் மூலம் ஆபத்தை அகற்ற முடியும்.

குறித்த அபாயத்தை அகற்றச் சுகாதார வழிகாட்டுதல் களின்படி செயற்பட நாங்கள் பொதுமக்களிடமும் அரசியல்வாதிகளிடமும் கோரிக்கை விடுக்கிறோம் என மஹிந்த தேசப்பிரிய மேலும் தெரிவித்துள்ளார்.