நாட்டில் இரண்டாவது அலை கொரோனா தொற்று வைரஸ் தொடர்பான அறிகுறிகள் எதுவும் இல்லை என சுகாதார பணிப்பாளர் வைத்தியர் அனில் ஜயசிங்க தெரிவித்தார்.
குறித்த கொரோனோ நோயாளிகள் எண்ணிக்கை மிகக் குறைவான இடங்களில் மட்டுமே பதிவாகியுள்ளதாகவும், குறித்த நோயாளிகளின் நண்பர்கள் மற்றும் நெருங்கிய தொடர்புடைய அனைவரும் அடையாளம் காணப்பட்டு சுய தனிமைப்படுத்தப்பட்ட நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
இந்நிலையில், நாடு முழுவதும் வைரஸ் பரவியதாகத் தெரிவிக்கப்படுவது பொய்யான வதந்திகள் என்றும் ஒரு குறிப்பிட்ட சில பகுதிகளில் மாத் திரம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக அனில் ஜயசிங்க தெரிவித்துள்ளார்.

