லொறி மோதி பொலிஸ் உத்தியோகத்தர் பலி

332 0

ஹக்மன , கொங்கல பகுதியில் பொலிஸ் காவலரணில் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் மீது லொறியொன்று மோதியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவத்தில்  3 பொலிஸ் உத்தியோகத்தர்கள் காயமடைந்த நிலையில், அதில் 36 வயதுடைய ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

ஏனைய இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்களும், சிகிச்சைக்காக மாத்தறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.