19வது திருத்தத்தினை இல்லாமல் செய்வதற்கான முயற்சிகளை வாக்காளர்கள் முறியடிக்கவேண்டும்

291 0

அரசமைப்பின் 19வது திருத்தத்தினை இல்லாமல் செய்வதற்கான பொதுஜனபெரமுனவின் முயற்சிகளை வாக்காளர்கள் தோற்கடிக்கவேண்டும் என சிவில் சமூகத்தின் பிரதிநிதிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

கொழும்பில் இடம்பெற்றநிகழ்வொன்றில் சுதந்திர மக்கள் கூட்டு என்ற அமைப்பின் பிரதிநிதிகள் அரசாங்கம் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெறுவதன் மூலம் அழிக்கநினைக்கும் 19 வது திருத்தத்தை காப்பாற்றவேண்டியதன் அவசியம் குறித்து கருத்து வெளியிட்டுள்ளனர்.

நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் பெறப்பட்ட சாதகமான விடயங்களை இல்லாமல் செய்வதற்கான மக்கள் ஆணையை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கோருகின்றது என சிவில் சமூகசெயற்பாட்டாளர் காமினி வியாங்கொட தெரிவித்துள்ளார்.

இலங்கையின் வரலாற்றில் முகவும் முற்போக்கான அரசமைப்பு திருத்தம் என 19வது திருத்தத்தினை வர்ணித்துள்ள அவர் அரசாங்கம் தனிநபர் ஒருவரின் கரங்களில் அதிகாரத்தை குவிப்பதற்கு முயல்கின்றது எனவும் தெரிவித்துள்ளார்.
19வது திருத்தத்தை இல்லாமல் செய்வது அரசாங்கத்தின் மூன்று பிரிவுகள்மத்தியில் அதிகார சமநிலையின்மையை உருவாக்கும் என தெரிவித்துள்ள காமினி வியாங்கொட மேலும் நாடாளுமன்றத்தின் அதிகாரங்களை குறைப்பதும் , அதிகாரங்கள் தனியொருவரிடம் செல்லும் நிலையை உருவாக்கும் என குறிப்பிட்டுள்ளார்.

இது முற்றுமுழுதாக சர்வாதிகாரத்தை நோக்கிய நடவடிக்கை எனவும் தெரிவித்துள்ளார்.

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையும், அரசமைப்பின் 18வது திருத்தம் அளவுக்கதிகமான பெரும்பான்மையை பயன்படுத்தியே ஏற்படுத்தப்பட்டன என்பதை சுட்டிக்காட்டியுள்ள காமினி வியாங்கொட 17 மற்றும் 19 வது திருத்தங்களை மூன்றில் இரண்டு பெரும்பான்மையில்லாத அரசாங்கங்கள் ஏனைய கட்சிகளின் ஆதரவுடன் நிறைவேற்றின என தெரிவித்துள்ளார்.

பிற்போக்குத்தனமான சட்டங்களை நிறைவேற்றுவதற்காக அரசாங்கங்கள் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை கோரியமைக்கான முன்னுதாரணங்கள் உள்ளன என காமினி வியாங்கொட தெரிவித்துள்ளார்.

இந்த நிகழ்வில் உரையாற்றிய பேராசிரியர் சரத் விஜயசூரிய ஜனாதிபதி செயலணிகள் மூலம் ஜனாதிபதி அரசாங்கத்தின் அனைத்து விடயங்களையும் தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்துள்ளார் என தெரிவித்துள்ளார்.

2
பசில் ராஜபக்ஷவை பிரதமராக்கும் எண்ணத்திலேயே அரசாங்கம் செயற்படுகிறது -ஹிருனிக்கா

பசில் ராஜபக்ஷவை பிரதமராக்கும் எண்ணத்திலேயே அரசாங்கம் உள்ளது என ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட வேட்பாளர் ஹிருனிக்கா பிரேமச்சந்திர தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமையகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்ததாவது,
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகரான பசில் ராஜபக்ஷவை பிரதமராக்கும் எண்ணத்திலேயே அரசாங்கம் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெற்றுக் கொடுக்குமாறு கோரிக்கை விடுத்து வருகின்றது என ஹிருனிக்கா தெரிவித்தார்.

வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக அரசாங்கத்திற்கு வெளிநாடுகளிலிருந்தும் , உள்நாட்டில் சில தனவந்தர்களிடமிருந்தும் கோடிக்கணக்கான நிவாரண நிதி வழங்கப்பட்டுள்ளன.

இந்த நிதிக்கு என்ன நடந்தது? மக்களுக்கு இது தொடர்பில் அரசாங்கம் விளக்கமளிக்க வேண்டும். இந்நாட்டுப் பிரஜை என்ற வகையில் அது தொடர்பில் தெரிந்துக் கொள்வதற்கு எமக்கு உரிமையுள்ளது.

ராஜபக்ஷாக்கள் சுனாமி நிவாரண நிதியை எவ்வாறு கொள்ளை யிட்டார்கள் என்பது தொடர்பில் நாமறிவோம். அதனால் இவர்களின் செயற்பாடுகள் மீது எமக்கு நம்பிக்கை இல்லை என அவர் தெரிவித்தார்.