வெலிக்கடை சிறைச்சாலையிலுள்ள எந்தவொரு கைதிக்கோ அல்லது அதிகாரிக்கோ கொரோனா தொற்று ஏற்படவில்லை என உறுதி செய்யப்பட்டுள்ளதாக இராணுவத்தளபதி லெப்டின் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
சிறைச்சாலையில் மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதனைகளில் தொற்று ஏற்படவில்லை என்பது என்பது உறுதி செய்யப்பட்டதாக இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.
வெலிக்கடை சிறைச்சாலையின் கைதி ஒருவர் கொரோனா தொற்றுக் குள்ளானவராக நேற்று முன்தினம் அடையாளம் காணப்பட்டார்.
அவருக்கு எவ்வாறு வைரஸ் தொற்றியது என்பது இன்னும் உறுதியாக கண்டறியப்படவில்லை.
இதனால் அனைத்து பிரிவுகளிலும் PCR பரிசோதனைகள் முன்னெடுக்கப் படுவதாக இராணுவத் தளபதி மேலும் தெரிவித்துள்ளார்.

