தேசிய பாதுகாப்பிற்கு ஜனாதிபதியே முழு பொறுப்பு! -மேஜர் ஜெனரல் கபிலஹெந்தவிதாரன

328 0

தேசிய பாதுகாப்பிற்கு ஜனாதிபதியே முழு பொறுப்பு என இலங்கையின் தேசிய புலனாய்வு பிரிவின் முன்னாள் தலைவர் மேஜர் ஜெனரல் கபிலஹெந்தவிதாரன தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறுதாக்குதல்கள் குறித்;து விசாரணைகளை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன்னிலையில் சாட்சியமளிக்கையில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

பலஅமைப்புகள் பல நபர்கள் இருந்தாலும் நாட்டின் தேசிய பாதுகாப்பிற்கு ஜனாதிபதியே பொறுப்பு என அவர் தெரிவித்துள்ளார்.

தேசிய பாதுகாப்பிற்கு ஜனாதிபதியே பொறுப்பு அதேவேளை பாதுகாப்பு அமைச்சின் செயலாளருக்கும் அதேயளவு பொறுப்புள்ளது அவரும் இந்த விடயத்தில் பொறுப்புக்கூறவேண்டும் என மேஜர் ஜெனரல் கபிலஹெந்தவிதாரன தெரிவித்துள்ளார்.

நான் பத்து வருடங்களாக தேசிய புலனாய்வு பிரிவின் தலைவராக பணியாற்றினேன்,2015 ஜனவரி 9ம் திகதி எனது பதவியை இராஜினாமா செய்தேன் என அவர் தெரிவித்துள்ளார்.

2015 இல் பதவிக்கு வந்தவர்களுடன் இணைந்து பணியாற்ற முடியாது என உணர்ந்ததால் எனது பதவியை இராஜினாமா செய்தேன் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

2001 இல் பிரதமராகயிருந்தவேளை ரணில்விக்கிரமசிங்க புலனாய்வுபிரிவினர் தெரிவிப்பதை செவிமடுக்கவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.