சிறைக்கைதி எவ்வாறு கொரோனாவைரசினால் பாதிக்கப்பட்டார்

343 0

போதைப்பொருளுக்கு அடிமையானவர்களுக்கான புனர்வாழ்வு முகாமில் தங்கவைக்கப்பட்டிருந்த சிறைக்கைதி எவ்வாறு கொரோனாவைரசினால் பாதிக்கப்பட்டார் என்பது இன்னமும் தெரியவரவில்லை என சிறைச்சாலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வெலிக்கடை சிறைச்சாலை கைதியொருவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பிருப்பது நேற்று தெரியவந்துள்ளதை தொடர்ந்து சிறைக்கைதிகள் சிறைசாலை அதிகாரிகள் பணியாளர்கள் உட்பட 204 பேரை அதிகாரிகள் தனிமைப்படுத்தல் முகாம்களுக்கு அனுப்பியுள்ளனர்.

பொலனறுவை வெலிக்கடை பல்லேகல்ல சிறைச்சாலைகளை சேர்ந்தவர்கள் இவ்வாறு தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளனர் என கொவிட் 19 குறித்த செயலணி தெரிவித்துள்ளது.

அவர்கள் அனைவரும் நோயாளியுடன் தொடர்பிலிருந்தவர்கள்

லங்கையின் சனநெருக்கடி மிக்க சிறைச்சாலைகளில் கொவிட் 19 பரவுவது குறித்து அதிகாரிகள் அச்சத்துடன் காணப்பட்ட நிலையிலேயே இந்த சூழ்நிலை உருவாகியுள்ளது.

இதனை தொடர்ந்து இலங்கையின் அனைத்து சிறைச்சாலைகளுக்ம் வெளியாட்கள் செல்வதற்கு அதிகாரிகள் தடை விதித்துள்ளனர்.

இதேவேளை குறிப்பிட்ட கைதி எவ்வாறு கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டார் என்பது இன்னமும் மர்மமாகவே காணப்படுகின்றது

இது குறித்து நாங்கள் தொடர்ந்தும் விசாரணைகளை முன்னெடுத்துள்ளோம் என கொவிட் 19 குறித்த செயலணியின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு அழைத்து வரப்பட்டவர்களில் போதைப்பொருளுக்கு அடிமையானவர்கள் புனர்வாழ்வு அளிக்கப்படவேண்டியவர்கள் இந்த கைதி காணப்பட்ட பகுதியில் காணப்பட்டிருக்கலாம் என அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.