உலகின் எந்த நாட்டிலும் இல்லாத தேசிய சிந்தனை ஒன்று இலங்கை ஊடகங்களுக்கு உள்ளது!

334 0

10561811_10153891741931327_8157193597005581823_nஉலகின் எந்த நாட்டிலும் இல்லாத தேசிய சிந்தனை ஒன்று இலங்கை ஊடகங்களுக்கு உள்ளது என ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

விஞ்ஞான ஆய்வுக்கான ஜனாதிபதி விருத்துகள் நிகழ்வில் கலந்துகொண்டிருந்தபோதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

அங்கு உரையாற்றிய அவர், இலங்கையின் ஊடகங்களுக்கு, குப்பை சுவையும், ஆட்சியை மாற்றுவதும், நிகழ்கால அரசாங்கத்தை இழிவுபடுத்துவதும், அரசியல்வாதிகளை புதிதாக உருவாக்குவதும், அரசியல்வாதிகளை அதிகாரத்தில் இருந்து கீழ் இறக்கிக்காட்டும் அதிகாரம் தம்மிடம் உள்ளது என்பதுமே, விருப்பத்திற்கு உரிய செயர்பாடாத்க உள்ளது என கடுமையான விமர்சனத்திற்கு உள்ளாக்கினார்.

நாட்டை கட்டியெழுப்ப, தேசிய ரீதியாக முன்னேற்றமடைய ஊடகங்களுக்கு இருக்கவேண்டிய பொறுப்பு தொடர்பில் கடந்த பல மாதங்களாக பல தடவை தான் சுட்டிக்காட்டியபோதும், நமது ஊடகங்கள் அவற்றை துளி அளவும் உள்வாங்கிக்கொள்ளவில்லை என அவர் இதன்போது குறிப்பிட்டார்.

இதேவேளை, இலங்கையின் பத்திரிகைகளை வாசிக்க முற்படும்போதும், அல்லது தொலைக்காட்சிகளில் பத்திரிகளை வாசிப்பதை கேட்கும்போதும், இலங்கையின் முன்னேற்றத்திற்காகவும், இணக்கப்பாட்டிற்காகவும் எத்தனை செய்திகள் முதல் பக்கத்தில் இடம்பிடிக்கின்றன என தெரிவித்த ஜனாதிபதி, பத்திரிகையின் முதல் பக்கம்தான் இலங்கையை அழித்து சின்னாபின்னமாக்கும் பக்கம் என குறிப்பிட்டுள்ளார்.