சுகாதாரவழிகாட்டுதல்களை அரசியல் கட்சிகள் புறக்கணிக்கின்றன! -கபே

250 0

தேர்தல் கூட்டங்களில் அரசியல் கட்சிகள் சமூக விலக்கலை கடைப்பிடிப்பதில்லை என தேர்தல் கண்காணிப்பு அமைப்பான கபே குற்றச்சாட்டியுள்ளது.

ஒரு சென்டிமீற்றர் சமூகவிலக்கலை அரசியல் கட்சிகள் தேர்தல் கூட்டங்களில் கடைப்பிடிக்கவில்லை என தெரிவித்துள்ள கபே அமைப்பு நாட்டில் தொடர்ந்தும் கொரோனா வைரஸ் ஆபத்து காணப்படுகின்ற போதிலும் தேர்தல் பிரச்சார கூட்டங்களில் இந்த நிலையே காணப்படுகின்றது என தெரிவித்துள்ளது.

பொதுத்தேர்தல் பிரச்சாரத்தின் போது முகக்கவசம் அணியவேண்டும் சமூக விலக்களை கடைப்பிடிக்கவேண்டும் என்ற சுகாதார வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளன எனினும் அனேக வேட்பாளர்கள் இதனை புறக்கணிக்கின்றனர்என கபே தெரிவித்துள்ளது.

கொவிட் 19 பரவல் ஒரளவிற்கு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது என்றபோதிலும் பொதுமக்களின் கவனமின்மை காரணமாக மீண்டும் வைரஸ் பரவலாம் என கபே சுட்டிக்காட்டியுள்ளது.

இதன் காரணமாக மீண்டும் நோய் பரவலை தடுக்கவேண்டியது பொதுமக்களின் கடமை எனவும் தேர்தல் கண்காணிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.

மக்களின் பாதுகாப்பை புறக்கணித்து தங்கள் தேர்தல் வெற்றி குறித்து மாத்திரம் சிந்திக்கும் வேட்பாளர்களுக்கு உரிய பதிலை வாக்களிப்பின்போது மக்கள் வழங்கலாம் என கபே தெரிவிததுள்ளது.