விழுப்புரத்தில் பிரண்ட்ஸ் ஆஃப் போலீஸ்-க்கு தடை

267 0

விழுப்புரம் மாவட்டத்தில் காவல் பணியில் ஈடுபட பிரண்ட்ஸ் ஆஃப் போலீஸ்-க்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.சாத்தான்குளத்தை சேர்ந்த ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் விசாரணை காவலில் மரணமடைந்தனர். இந்த வழக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளையின் உத்தரவின் படி சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

இவ்வழக்கு தொடர்பாக உயிரிழந்த ஜெயராஜ் வீடு, கடைகளில் ஆய்வு செய்து பல்வேறு தரப்பினரிடமும் விசாரணை செய்யப்பட்டது. மேலும் இச்சம்பவம் நடந்த அன்று  சாத்தான்குளம் காவல்நிலையத்தில் பணியாற்றி பிரண்ட்ஸ் ஆஃப் போலீசை விசாரிப்போம் என சிபிசிஐடி ஜஜி சங்கர் தெரிவித்தார்.

இந்த நிலையில், விழுப்புரம் மாவட்டத்தில் காவல்பணியில் ஈடுபட பிரண்ட்ஸ் ஆஃப் போலீஸ்-க்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

சமூக பணிகளுக்கு மட்டுமே பிரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் பயன்படுத்தப்படுவார்கள் என்று எஸ்.பி ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.