ஏடிஎம்-மில் கொள்ளை முயற்சி: ரூ.6 லட்சம் பணம் எரிந்து நாசம்

363 0

ராசிபுரம் அருகே ஏடிஎம் மையத்தில் நடைபெற்ற கொள்ளை முயற்சியில் ரூ.6 லட்சம் மதிப்புள்ள பணம் எரிந்து நாசமானது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே பாச்சலில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்திலுள்ள கார்ப்பரேஷன் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியின் ஏடிஎம் மையத்தில் ரூ.6 லட்சம் மதிப்புள்ள பணம் எரிந்து நாசமாயின.

இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், கொள்ளை முயற்சியின்போது தீ விபத்து ஏற்பட்டதா? அல்லது மின்கசிவால் விபத்து ஏற்பட்டதா? என விசாரணை மேற்கொண்டனர்.

முதற்கட்ட விசாரணையில் ஏடிஎம் மையத்தில் 4 பேர் கொண்ட கும்பல் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டது தெரியவந்தது. அக்கும்பல் ஏடிஎம் எந்திரத்தை வெல்டிங்கை வைத்து உடைக்க முயற்சித்த போது தீப்பிடித்து ரூ.6 லட்சம் மதிப்புள்ள பணம் எரிந்து நாசமானது. இக்கொள்ளை முயற்சியில் தொடர்புடையவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.