சிகரெட் தொகையுடன் பெண் ஒருவர் கைது

385 0

சிறிலங்காவில் கல்கிஸ்ஸ பொலிஸ் பிரிவின் கடற்கரை வீதி பிரதேசத்தில் கல்கிஸ்ஸ பொலிஸ் நிலைய அதிகாரிகளுக்கு கிடைக்கப்பெற்ற தகவல் ஒன்றின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் தீர்வை வரி செலுத்தாமல் இந்நாட்டுக்கு கொண்டுவரப்பட்ட 14 ஆயிரம் சிக்ரெட்டுக்களுடன் சீன நாட்டு பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

55 வயதுடைய குறித்த பெண் தங்கியிருந்த அறையில் இருந்து இந்த சிகரெட் தொகை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சந்தேகநபர் இன்று (04) கல்கிஸ்ஸ நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ள நிலையில் கல்கிஸ்ஸ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.