சிறிலங்காவில் பொது இடங்களில் நடமாடும் போது பொதுமக்கள் முகக்கவசம் அணிந்து கொள்வது அவசியம் என கல்முனை பொலிஸ் நிலைய போக்குவரத்து பிரிவின் பொறுப்பதிகாரி நிஹால் சிறிவர்த்தன தெரிவித்துள்ளார்.
அம்பாறை மாவட்டத்தில் கல்முனை பிராந்தியத்தில் கொரோனா தொற்றுப்பரவலை கட்டுப்படுத்தும் வகையிலான பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இதற்கமைய கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை மற்றும் கல்முனை தலைமையக பொலிஸ் நிலையம் இணைந்து மக்களிற்கு விழிப்புணர்வு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றன.
சுகாதார விதி முறைகளுக்கு மாறாக செயல்படுவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் முகக்கவசம் அணியாது பொது இடங்களில் நடமாடுபவர்களை தனிமைப்படுத்தல் சட்டத்துக்கு அமைய 14 நாட்கள் சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுவார்கள் எனவும் பொலிஸ் ஊடகப்பிரிவு அறிவித்துள்ளதாக கல்முனை பொலிஸ் நிலைய போக்குவரத்து பிரிவின் பொறுப்பதிகாரி நிஹால் சிறிவர்த்தன குறிப்பிட்டுள்ளார்.

