யாழில் போதைப்பொருளுடன் ஒருவர் கைது!

255 0

இரண்டு கோடி ரூபாய் மதிப்புள்ள ஐஸ் போதை பொருளை வாகனத்தில் கடத்தி சென்ற நபரை பொலிஸ் அதிரடி படையினர் கைது செய்து பருத்தித்துறை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

வல்வெட்டித்துறை பகுதியை சேர்ந்த 50 வயதுடைய நபரே கைது இவ்வாறு செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபர் வல்வெட்டித்துறை பகுதியில் இருந்து பருத்தித்துறை பகுதிக்கு ஹயஸ் ரக வாகனத்தில் ஐஸ் போதை பொருளை கடத்தி செல்வதாக பொலிஸ் அதிரடி படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் வாகனத்தை மடக்கிய அதிரடி படையினர் வாகனத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 2 கோடி ரூபாய் மதிப்புள்ள 2 கிலோ கிராம் ஐஸ் போதை பொருளை மீட்டனர்.

அதனை தொடர்ந்து வாகனத்தை செலுத்தி சென்ற நபரை கைது செய்ததுடன் , மீட்கப்பட்ட போதை பொருளையும் கைது செய்யப்பட்ட நபரையும் மேலதிக விசாரணைக்காக பருத்தித்துறை பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.