சிறிலங்காவில் மேடை நாடகம் மற்றும் இசை நிகழ்ச்சிகளுக்கான அரங்குகள் திறப்பு

21 0
சிறிலங்காவில் மேடை நாடகம் மற்றும் இசை நிகழ்ச்சிகளுக்கான அரங்குகள் ஜூலை மாதம் 15 ஆம் திகதி தொடக்கம் திறக்கப்படவுள்ளன.

அரங்குகளில் காணப்படும் இருக்கைகளில் 50 சதவீத இருக்கைகளுக்கு மாத்திரம் ரசிகர்களை அனுமதிக்கும் கட்டுப்பாட்டின் கீழ் இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்கள பணிப்பாளர் நாயகம் நாலக கலுவெவ தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் சுகாதார சேவை பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்கவால் சுகாதார வழிகாட்டுதல்கள் வௌியிடப்பட்டுள்ளது.