யாழ். மாவட்டத்தில் தேர்தல் தொடர்பில் 24 முறைப்பாடுகள் பதிவு!

22 0

பொதுத் தேர்தல் தொடர்பாக  இதுவரை 24 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக, யாழ்ப்பாண மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர் இ.அமல்ராஜ் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இன்று (புதன்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

வேட்பாளர்களின் பதாதைகளை அகற்றும் நடவடிக்கைகள், பிரதேச செயலக ரீதியில், பொலிஸாரின் உதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது எனவும் தெரிவித்தார்

நடைபெறவுள்ள  பொதுத் தேர்தலுக்காக   நாடு பூராகவும் ஏற்படுகள் நடைபெற்று வரும் நிலையில் தபால் மூல வாக்களிப்பு ஜூலை மாதம் 14,15,16 மற்றும் 17 ஆம் திகதிகளில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடதக்கது.