பாரிஸ் பொண்டி நகரசபைக்கு தமிழ் பெண் உறுப்பினர் தெரிவு

465 0

பாரிஸில் தமிழர்கள் அதிகமாக வசிக்கும் புறநகரான பொண்டி (Bondy) நகரசபைக்கான தேர்தலில் வலதுசாரி La Republican வேட்பாளரான Stephen Herve (50,36%) மேயராக வெற்றி பெற்றுள்ளார்.

பொண்டி தமிழ் மக்கள் சார்பில் அவரது கட்சிப் பட்டியலில் இணைந்து போட்டியிட்டவர்களில் பிரேமி பிரபாகரன் (Piremy Pirabaharan) என்ற ஈழத்தமிழ் மாணவியும் சபையின் உறுப்பினராகத் தெரிவாகி உள்ளார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

புலம்பெயர்ந்த தமிழர்கள் பரவலாக வசிக்கும் Seine-Saint-Denis பிராந்தியத்தில் பொண்டி உட்பட பல நகர சபைகளின் உறுப்பினர் பதவிகளுக்கு இம்முறை ஈழத்தமிழ் பின்னணி கொண்ட பலர் போட்டியிட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இப் பிராந்தியத்தில் போட்டியிட்ட தமிழர்களில் பலரும் உறுப்பினர்களாகத் தெரிவாகும் வாய்ப்பை இழந்துள்ள போதிலும் அவர்கள் சார்ந்த வலது மற்றும் இடது சாரிக் கட்சிகளின் பிரதான வேட்பாளர்கள் பல நகர சபைகளைக் கைப்பற்றி வெற்றியீட்டி உள்ளனர்.