திருமணமாகவுள்ள ஜோடியொன்று, திருமணத்துக்கான புகைப்படம் எடுப்பதற்காக லக்கல பிரதேசத்திலுள்ள நக்கள்ஸ் வனப்பகுதியில் அமைந்துள்ள சேரஎல்ல நீர்வீழ்ச்சிக்குச் சென்று, செல்பி எடுக்க முயற்சிக்கையில் மணமகன் நீர்வீழ்ச்சியில் தவறி வீழ்ந்து காணாமல் போயுள்ளார்.
நேற்று (28) பகல் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன், குறித்த இருவரும் நீர்வீழ்ச்சிக்கு அருகில் இருந்து செல்பி எடுக்க முயற்சித்த போது, இருவரும் தவறி விழுந்த போது, மணப்பெண் காப்பாற்றப்பட்டுள்ளதுடன், மணமகன் காணாமல் போயுள்ளாரென லக்கல பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
குருநாகல் பிரதேசத்தைச் சேர்ந்த 27 வயதுடைய இளைஞரே இவ்வாறு காணாமல் போயுள்ளாரெனவும், குறித்த ஜோடி குருநாகல் பிரதேசத்திலிருந்து, புகைப்படம் எடுப்பதற்காக லக்கல பிரதேசத்துக்கு வருகைத் தந்துள்ளார்களென்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காணாமல் போன இளைஞளைத் தேடுவதற்காக, கடற்படையின் சுழியோடிப் பிரிவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் லக்கல பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

