கொரோனா வைரஸ் – செக் குடியரசில் நாள் ஒன்றில் பதிவான அதிகளவிலான பாதிப்பு

243 0

செக் குடியரசில் புதிதாக கொரோனா வைரஸ் தொற்று உறுதியான 260 நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் இது நாளொன்றுக்கு பதிவான அதிகளவிலான நோயாளிகளின் எண்ணிக்கை என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

அந்தவகையில் இதுவரை கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 11 ஆயிரத்து 298 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

புதிய நோயாளிகளில் கிட்டத்தட்ட 122 பேர் நாட்டின் கிழக்கில் உள்ள கார்வினா பிராந்தியத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்றும் அங்கு சுரங்கத் தொழிலாளர்கள் மத்தியில் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாகவும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

களியாட்ட விடுதிகளை திறக்கும் நேரம் மற்றும் கலாச்சார நிகழ்வுகளுக்கு வரம்புகள் தவிர, வணிகத்தின் மீதான பெரும்பாலான கட்டுப்பாடுகளை அரசாங்கம் படிப்படியாக நீக்கியுள்ளது.

கடந்த திங்கட்கிழமை முதல் 500 பேர் முதல் 1,000 பேர் வரை பொதுக் கூட்டங்களில் கூட அனுமதி வழங்கப்பட்டுள்ளதுடன் வர்த்தக கண்காட்சிகள், உயிரியல் பூங்காக்கள், அருங்காட்சியகங்கள்என்பனவற்றிற்கு அனுமதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.