இலங்கை கடற்படையினரின் குற்றச்சாட்டை நிராகரிக்கும் இந்தியா

400 0

indian-fishermen-arrதமிழக கடற்றொழிலாளர்கள் அத்துமீறுவதன் காரணமாகவே கைதுசெய்யப்படுவதாக இலங்கை கடற்படையினர் சுமத்தும் குற்றச்சாட்டை இந்திய சமுத்திர தகவல் நிலையம் நிராகரித்துள்ளது.
அந்த நிலையத்தின் தலைவரான விஞ்ஞானி ஸ்ரீனிவாச குமார் துமாலா இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ளார்
தமது நிலையம் கடற்றொழிலில் ஈடுபட்டுள்ள தமிழக கடற்றொழிலாளர்கள் அத்துமீறும் போது அதனை தடுக்க எச்சரிக்கைகளை விடுக்கிறது.
எனவே அவர்கள் அந்த எச்சரிக்கைகளுக்கு பின்னர் எல்லைத்தாண்டி சர்வதேச கடலுக்கு செல்வதில்லை என்றும் ஸ்ரீனிவாசகுமார் துமாலா தெரிவித்துள்ளார்

Leave a comment