ஆட்கடத்தல் விவகாரம் – ஒருவர் கைது

4060 0

arrest_07இந்தியாவில் உள்ள இலங்கை அகதிகள் அவுஸ்திரேலியா செல்வதற்கு படகுகளையும் ஏற்பாடுகளையும் செய்துக்கொடுத்ததாக சந்தேகிக்கப்படும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவரை தமிழக கியூ பிரிவு காவற்துறையினர் கைதுசெய்துள்ளனர்.
கன்னியாக்குமாரியில் இருந்து அவுஸ்திரேலியா நோக்கி பயணிக்க தயாராகவிருந்த 9 பேரை அண்மையில் காவற்துறையினர் கைதுசெய்தனர்
இதன்பின்னரே அவர்; கைதுசெய்யப்பட்டுள்ளார்
முன்னதாக, படகு பயணங்களை ஒழுங்கு செய்து கொடுத்ததாக சந்தேகிக்கப்படும் 5 பேரை காவற்துறையினர் கைதுசெய்திருந்தனர்.
இந்தநிலையில் அவுஸ்திரேலியாவுக்கு பயணிக்கவிருந்தவர்கள் தமது பயணத்துக்காக ஒரு லட்சம் ரூபாவை சட்டவிரோத மனிதக்கடத்தல்காரர்களுக்கு வழங்கியுள்ளதாக ஆரம்ப விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

Leave a comment