திமுக எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகன் மறைவை தொடர்ந்து அவர் பணியாற்றி வந்த சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது.
குடியாத்தம் எம்.எல்.ஏ. காத்தவராயன், திருவொற்றியூர் எம்.எல்.ஏ. கே.பி.பி.சாமி ஆகியோர் கடந்த பிப்ரவரி மாதம் மரணமடைந்தனர். இதனால் 234 இடங்களைக் கொண்ட தமிழக சட்டசபையில் 2 இடங்கள் காலியானது. இதுதொடர்பான அறிவிப்பு ஏற்கனவே வெளியாகி இருந்தது.
இந்தநிலையில் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகன் கடந்த 10-ந் தேதி கொரோனா தொற்றினால் காலமானார். எனவே அந்த தொகுதியை காலியிடமாக அறிவிக்க இந்திய தேர்தல் ஆணையத்துக்கு கருத்துரு அனுப்பி வைக்கப்பட்டு இருந்தது. தற்போது சபாநாயகர் ப.தனபால் நேற்று அறிவிப்பாணை ஒன்றை வெளியிட்டார். அதில், எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகன் மறைவை தொடர்ந்து அவர் பணியாற்றி வந்த சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி காலியானதாக அறிவிக்கப்படுகிறது’ என்று கூறப்பட்டுள்ளது

