அமெரிக்காவில் குறைந்து வரும் இறப்பு விகிதம்

359 0

அமெரிக்காவில் தினமும் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் தற்போது இறப்பு விகிதம் குறைந்து வருவது சற்று ஆறுதலாக உள்ளது.

சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது உலகின் 215 நாடுகளுக்கு மேல் பரவியுள்ள இந்த வைரஸ் பெரும் மனித இழப்புகளை ஏற்படுத்தி வருகிறது.

இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலில் சிக்கி குணமடைந்தோர் எண்ணிக்கை  41.88 லட்சத்தைக் கடந்துள்ள நிலையில் 4.38 லட்சம் பேர் உயிரிழந்து உள்ளனர்.  உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை  81.08 லட்சத்தைத் தாண்டியுள்ளது.

கொரோனா வைரஸ் பாதுகாப்பு

நேற்று ஒரே நாளில் பிரேசிலில் 23,674 பேருக்கும், அமெரிக்காவில் 20,680 பேருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது.  கொரோனா வைரஸ் தொற்றால்  அமெரிக்கா மிகவும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அங்கு  வைரஸ் தொற்றால் 21 லட்சத்துக்கும் அதிகமானோர்  பாதிக்கபட்டு உள்ளன. 116,114 பேர் கொரோனா தொற்றால் பலியாகி உள்ளனர்.

நாட்டில் ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு உள்ளதால் ஒவ்வொரு நாளும் சுமார் 20,000 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்புகள் பதிவாகி வருகிறது.

ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் சனிக்கிழமை பிரச்சார பேரணி நடத்த  திட்டமிட்டுள்ள நிலையில், கொரோனா வைரஸ் அபாயத்தை அதிகரிக்க வேண்டாம் என்று துல்சா நகரத்தின் வேண்டுகோளை அவர் நிராகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் தொடர்ச்சியாக இரண்டாவது நாளாக கடந்த 24 மணி நேரத்தில் 400 க்கும் குறைவானோர் கொரோனா வைரஸ் தொற்றால் இறப்புகளை பதிவு செய்துள்ளது.  அமெரிக்காவில் கடந்த திங்கட்கிழமை கொரோனா தொற்றால் இறப்பு எண்ணிக்கை 382 ஆக இருந்த நிலையில், இன்று செவ்வாய்க்கிழமை இறப்பு எண்ணிக்கை 385 பதிவு செய்யப்பட்டுள்ளது சற்று ஆறுதலான செய்தியாக உள்ளது.