வவுனியா பொருளாதார மத்திய நிலையம் – முக்கிய கலந்துரையாடல்

5361 24

meting_vavuniya_001தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், வட மாகாண முதலமைச்சர் மற்றும் மாகாண அமைச்சர்களுக்கிடையேயான கலந்துரையாடல் ஒன்று இன்று இடம்பெறவுள்ளது.
இந்த சந்திப்பு எதிர்கட்சி தலைவர் அலுவலகத்தில் இடம்பெறவுள்ளது.
இதன்போது, வவுனியாவில் அமைக்கப்படவுள்ள பொருளாதார மத்திய நிலையம் தொடர்பில் அதிக அவதானம் செலுத்தப்படும் என தமிழ் தேசிய கூட்டமைப்பு வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுதவிர தற்போதைய நிலவரங்கள் உள்ளிட்ட ஏனைய பல விடயங்கள் தொடர்பிலும் கலந்துரையாடப்படும் என்றும் அந்த தகவல்கள் குறிப்பிட்டுள்ளன.

Leave a comment