யாழ்ப்பாணம் – தென்மராட்சி, வரணி பகுதியில் மயங்கி விழுந்ததாக கூறப்படும் இளைஞன் ஒருவர் மரணமடைந்துள்ளார்.
இந்த சம்பவம் நேற்று (02) மாலை வரணி, நாவற்காடு பகுதியில் இடம் பெற்றுள்ளது. இதன்போது ஞானலிங்கம் பிரதீபன் (வயது-23) என்பவரே இவ்வாறு மரணமடைந்துள்ளார்.
குறித்த இளைஞன் மேசன் வேலைக்கு சென்று துவிச்சக்கரவண்டியில் வீடு நோக்கி சென்று கொண்டிருந்த வேளை வீட்டுக்கு அண்மையில் மயங்கி விழுந்து மரணமடைந்துள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

