பொதுத் தேர்தல் நடத்தப்படும் திகதியை ஆட்சேபனைக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதா? இல்லையா? என்பது குறித்த உயர்நீதிமன்றத்தின் இறுதி அறிவிப்பு நாளை வெளியிடப்படவுள்ளது.
இதற்கமைய நாளை பி.ப 3.00 மணிக்கு இந்த அறிவிப்பு வெளியிடப்படுமென, பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய தெரிவித்துள்ளார்.
மனுக்கள் மீதான விசாரணை இன்று 10 ஆவது நாளாக விசாரணைக்கு எத்துக்கொள்ளப்பட்டபோதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

