ஆறவிடாது கீறிய இரவுகள்- வன்னியூர் குரூஸ் –

230 0

ஆறவிடாது கீறிய இரவுகள்
**** *******
தேசத்து உறவுகள் கோரத்தால் செத்தழிந்த
சோகத்தில் உறவுகள் உலகெங்கும் சோர்ந்திருக்க….
முள்வேலி முகாமுக்குள் அடைபட்ட மக்களை
முள்ளாகிக் கிழித்திடும் வேலைகளும் தொடர்தனவே!

குண்டுகள் வந்தினி வீழாதெனப் பயமற்று
கொண்டு தப்பிய உயிர்களை அணைத்தபடி…
பட்ட காயங்கள் ஆறாத பெருவலியில்
பூட்டிய சிறைவாழ்வு தந்ததும் தொடர்வலியே!

சுமையிறக்கி வைத்தழச் சொந்தங்கள் யாருமின்றி
உள்மன வேதனைகள் உளறிக் கொண்டிருக்க…
அமைதியின் இரவுகளில் கேட்கின்ற அழுகுரல்கள்….
பீதியினைக் கொடுக்கின்ற புலியென்னும் கைதுகளே.

– வன்னியூர் குரூஸ் –