பௌத்த மயப்படுத்தலை தொல்பொருள் திணைக்களம் செய்யக்கூடாது!

329 0

இலங்கையின் தொல்பொருள் திணைக்களம் அனைவருக்கும் பொதுவானது நீதியாக செயற்பட வேண்டும் என காரைதீவு பிரதேச சபை தவிசாளர் கிருஸ்ணபிள்ளை ஜெயசிறில் தெரிவித்தார்.

தொல்பொருள் ஆய்வினை மேற்கொள்ள ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டுள்ள குழு கிழக்கில் தமிழரின் தொன்மையான அடையாளங்களை மறைத்து பௌத்தமயப்படுத்தும் வேலைகளை செய்கின்றதா எனும் கேள்விகள் எழுகிறது இதனை நாம் வன்மையாக கண்டிக்கின்றோம்.

ஊதாரணமாக தொல்பொருள் ஆய்வுக்காக திருகோணமலை மாவட்டத்தில் 74 இடங்களும் மட்டக்களப்பு மாவட்டத்தில் 55 இடங்களும் அம்பாறை மாவட்டத்தில் குறிப்பாக 248 இடங்களும் அடையாளம் காணப்பட்டள்ளன.

இவற்றில் அம்பாறை மாவட்டத்தில் 86 இடங்கள் தமிழர் பிரதேசங்களில் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன. எமது அடையாளங்களை திரிபடைய செய்து தமிழரின் அடையாளங்களை பௌத்த அடையாளங்களாக காட்ட முயற்சிக்கப்படகூடாது.

எல்லோருக்கும் பொதுவான தொல்பொருள் திணைக்களம் எமது பாரம்பரிய தொன்மையான அடையாளங்களை மாற்றியமைக்காது நீதியாகவும் உண்மையாகவும் வெளிப்படையாகவும் செயற்பட வேண்டும் என்றார்.