விமானம், ரெயில் நிலையங்களில் டாக்சி, ஆட்டோக்களுக்கு அனுமதி

320 0

விமானம், ரெயில் நிலையங்களுக்கு பயணிகளை அழைத்துவர, ஏற்றிச் செல்ல டாக்சி, ஆட்டோக்களுக்கு அனுமதி அளித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

23-ந் தேதியில் இருந்து சென்னை தவிர தமிழ்நாடு முழுவதும் ஆட்டோ, சைக்கிள் ரிக்‌ஷாக்கள் ஓட்டுநர் மற்றும் ஒரு பயணி மட்டும் பயணிக்கும் வகையில் இயக்கலாம் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார். தற்போது விமான நிலையங்கள், ரெயில் நிலையங்கள் படிப்படியாக செயல்பாட்டை தொடங்கியுள்ளன.

இந்த நிலையில் தமிழக தலைமைச் செயலாளர் கே.சண்முகம் வெளியிட்ட அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

ஆட்டோ, சைக்கிள் ரிக்‌ஷா இயக்கம் தொடர்பான அரசாணையில் மாற்றம் செய்வதற்கான முன்மொழிவை அரசுக்கு வருவாய் நிர்வாக ஆணையர் அளித்துள்ளார். அதன் அடிப்படையில் சில அம்சங்களை சேர்த்து அரசாணை திருத்தப்படுகிறது. அதன்படி, தமிழகத்தில் உள்ள விமான நிலையங்கள், ரெயில்வே நிலையங்களுக்கு பயணிகளை அழைத்து வருதல் மற்றும் ஏற்றிச் செல்லுதலுக்கு டாக்சி, ஆட்டோ, சைக்கிள் ரிக்‌ஷாவை அனுமதிக்கும் கூடுதல் அம்சமும் சேர்க்கப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.