காவல்துறையின் அவசர அழைப்பு எண்ணை தொடர்பு கொள்வதில் சிக்கல்

20 0

காவல்துறை அவசர எண்களான 100 மற்றும் 112 ஐ தொடர்பு கொள்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தமிழ்நாடு காவல்துறை அறிவித்துள்ளது.தமிழ்நாடு காவல்துறை சார்பில் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-

பிஎஸ்என்எல் தொலைத்தொடர்பு நிறுவனத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக, காவல்துறையின் அவசர எண்களான 100, 112 ஆகிய எண்களை தொடர்பு கொள்ள இயலாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் வோடாஃபோன், ஏர்டெல், ஐடியா, ஜியோ ஆகிய நிறுவனங்களின் நெட்வொர்க்கை பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் தற்காலிகமாக இந்த அவசர எண்களை பயன்படுத்த முடியாது என கூறப்பட்டுள்ளது.

அதன்படி 044- 46100100 மற்றும் 044- 71200100 ஆகிய எண்களை பொதுமக்கள் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.