உங்களை நினைத்து பெருமை அடைகிறோம் – மாணவர்களுக்கு ஊக்கம் அளித்த மெலனியா டிரம்ப்

274 0

இந்த சவாலான காலத்தில் நாங்கள் உங்களுக்கு துணையாக இருப்போம் என மாணவர்களுடனான உரையாடலில் அதிபரின் மனைவி மெலனியா டிரம்ப் தெரிவித்தார்.

சீனாவில் உருவான கொரோனா வைரசின் தாக்கம் உலகம் முழுவதும் கடும் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது.
உலக அளவில் கொரோனா வைரசின் தாக்கம் அதிகம் உள்ள பட்டியலில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது.
அங்கு கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 16 லட்சத்தை கடந்துள்ளது. கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 91 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
இந்நிலையில், அமெரிக்காவின் முதல் பெண்மணியான மெலனியா டிரம்ப் அங்குள்ள மாணவர்களிடம் நேற்று வீடியோ மூலம் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:
கொரோனா வைரஸ் தொடர்பாக ஏற்பட்டுள்ள அச்சம் குறித்து கவலைப்பட வேண்டாம். தற்போது நிகழ்ந்துள்ள இந்த மாற்றங்கள் எளிதானவை அல்ல. நீங்கள் மிகவும் வலுவாக இருந்தீர்கள். மற்றவர்களுக்கு உதாரணங்களாக நீங்கள் மாறிவிட்டீர்கள் என்பதைப் பற்றி நான் பெருமைப்படுகிறேன். உங்களை நினைத்து மிகவும் பெருமைப்படுகிறோம்.
இந்த அசாதாரண காலங்களில் உங்கள் குடும்பங்கள், நண்பர்கள் மற்றும் எங்கள் நாடு ஆரோக்கியமாகவும் பாதுகாப்பாகவும் இருக்க உதவியதற்கு நன்றி. உங்கள் படிப்பைத் தொடர்ந்ததற்கும் புதிய வழிகளில் கற்றதற்கும் நன்றி.
இந்த சவாலான காலங்களில் ஜனாதிபதியும் நானும் உங்களுடன் இருக்கிறோம். உங்களுக்கு எப்போதும் துணையாக இருப்போம். எங்களால் முடிந்த அனைத்தையும் தொடர்ந்து செய்கிறோம் என தெரிவித்தார்.