தமிழகத்தில் 25ம் தேதி விமான சேவையை தொடங்க வேண்டாம்- பிரதமருக்கு முதல்வர் கடிதம்

21 0

தமிழகத்தில் வரும் 25ஆம் தேதி முதல் விமான சேவை தொடங்க வேண்டாம் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி உள்ளார்.

நாடு முழுவதும் 25ம் தேதி முதல் உள்நாட்டு விமான சேவை தொடங்கப்படும் என விமான போக்குவரத்து அமைச்சகம் அறிவித்துள்ளது. இதற்காக அனைத்து விமான நிலையங்கள் மற்றும் விமான நிறுவனங்களும் தயாராக இருக்கும்படி தெரிவிக்கப்பட்டது. விமான பயண கட்டணங்களையும் நிர்ணயித்துள்ளது.

இந்நிலையில், வரும் 25ஆம் தேதி முதல் தமிழகத்தில் விமான சேவை தொடங்க வேண்டாம் என தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி உள்ளார்.

கொரோனா தாக்கம் தற்போது அதிகமாக இருப்பதால், ஜூன் மாதத்திற்கு பிறகு விமான சேவையை தொடங்கலாம் என
முதலமைச்சர் பழனிசாமி கூறியுள்ளார்.

மே 25 முதல் சென்னை, கோவையில் இருந்து உள்நாட்டு விமான சேவை தொடங்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.