ஒரே வாரத்தில் 3-வது முறையாக இந்திய தூதரை அழைத்து பாகிஸ்தான் கண்டனம்

27 0

பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அலுவலகம் இந்திய தூதருக்கு சம்மன் நேரில் அனுப்பி வரவழைத்து கண்டனம் தெரிவித்துள்ளது. இந்திய தூதரை அழைத்து பாகிஸ்தான் கண்டனம் தெரிவிப்பது இந்த வாரத்தில் இது 3-வது முறையாகும்.

பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அலுவலகம் நேற்று இந்திய தூதருக்கு சம்மன் நேரில் அனுப்பி வரவழைத்து கண்டனம் தெரிவித்துள்ளது. பாகிஸ்தானின் எல்லைக்கட்டுப்பாடு கோடு பகுதியான சிரிகோட்டில் இந்திய ராணுவத்தினர் அத்துமீறி தாக்குதல் நடத்தியதாகவும், இதில் எல்லையோர கிராமத்தில் வசிக்கும் 45 வயதான ஒருவர் காயமடைந்ததாகவும் கூறியுள்ளது.

இந்திய ராணுவ செய்தி தொடர்பாளர் நேற்று முன்தினம் வெளியிட்ட தகவலில், பாகிஸ்தான் ராணுவத்தினர் தொடர்ந்து 5 நாளாக எல்லையில் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருவதாக குறிப்பிட்டு இருந்தார். ஆனால் பாகிஸ்தான் இதை மறைத்து இந்திய தூதரை அழைத்து கண்டனம் தெரிவித்துள்ளது.

இந்திய தூதரை அழைத்து பாகிஸ்தான் கண்டனம் தெரிவிப்பது இந்த வாரத்தில் இது 3-வது முறையாகும். ஏற்கனவே கடந்த 18 மற்றும் 20-ந் தேதிகளிலும் இந்திய தூதரை அழைத்து கண்டனம் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.