முள்ளிவாய்க்கால் நெருப்பாற்றுக் கரையிலே! – 19 ஆம் நாள்

28 0

முள்ளிவாய்க்கால்
நெருப்பாற்றுக் கரையிலே!
****** *****
தூக்கவும் காக்கவும் முடியாத நிலையிலே…
உயிரோடும் உயிரற்றும் உறவினைப் பிரிந்துமே…
வலியோடு வந்தோரை வட்டுவாகல் வழியனுப்ப…
வலியோடே அணைத்தது குட்டித் திடலங்கே!

குடும்பமாய் அன்றங்கே இடம்பெயர்ந்த உறவுகள்…
கொடுமைக்குள் கொத்தாக அழிவுண்டு போனோருள்…
ஒவ்வொன்றாய் இழந்தங்கே அரவாசி ஆனோரும்…
அங்கங்கள் இழந்துமே அக்கரை ஏறினர்!

இனியேதோ எப்படியோ என்றபெரு அச்சத்தில்…
அனியாயம் புரிந்தோரின் அரக்கப் பிடியுள்ளே
துப்பாக்கி முனையங்கே அப்பப்போ வழிகாட்ட…
தப்பவே முடியாத தவிப்பிலே தமிழ் மக்கள்!

– வன்னியூர் குரூஸ்-