கடும்போக்கு பிக்கு அமைப்புக்கள் இணைந்து புதிய தேரர் பிரிவு(நிகாயா) உதயம்?

284 0

buddhist-chanting-morning-prayers-650x385கடந்த காலங்களில் தனித் தனியாக பல்வேறு செயற்பாடுகளில் ஈடுபட்ட முற்போக்கு பிக்குகளின் அமைப்புக்கள் பலவும் ஒன்றுசேர்ந்து தனியான தேரர்கள் பிரிவொன்றை அமைப்பதற்குத் தயாராகிவருவதாக தெரியவந்துள்ளது.

இந்தப் பிக்குகள் குழுவானது கடந்த காலங்களில் நாடு, இனம் மற்றும் சமயம் தொடர்பில் மக்களை எழுச்சி பெறச் செய்த ஒரே கருத்தைக் கொண்டவர்கள் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

தனித்தனியாக பிரிந்திருந்து தமது போராட்டத்தை முன்னெடுப்பதை விடவும், ஒன்றுபட்டு புதிய தலைமையின் கீழ் தமது கருத்தை முன்வைப்பதுதான் பொருத்தமானது என இந்த பிக்குகள் அமைப்புக்கள் தீர்மானித்துள்ளன.

கடந்த 2 மாதகாலமாக இந்தப் பிக்குகள் ஒன்றிணைவது தொடர்பாக நீண்ட கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரியவருகின்றது.

பிரதேச ரீதியில் பல்வேறு மட்டத்தில் சமூக விரோத செயல்களுக்கு எதிராக செயற்பட்ட சிறிய பிக்குகள் குழுக்களும், தேசிய மட்டத்தில் செயற்படும் பௌத்த பிக்குகள் குழுக்களும் இந்த கலந்துரையாடல்களில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

புதிய பிக்குகள் பிரிவொன்றைப் பிரகடனப்படுத்தியதன்பின்னர், அதற்கு மகாநாயக்க தேரராக யாரை நியமிப்பது என்பது தொடர்பாக கலந்துரையாடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய ரீதியில் செயற்படும் பல பிக்குகள் அமைப்புகளிலிருந்து அதற்கான முன்மொழிவுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.