தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் அல்லைப்பிட்டியில் முள்ளிவாய்கால் நினைவேந்தல் (காணொளி)

29 0

முள்ளிவாய்கால் நினைவேந்தல் வாரத்தின் இறுதி நாளான இன்று தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் அல்லைப்பிட்டியில் அமைந்துள்ள புனித பிலிப்பு நேரியர் தேவாலயத்தில் அஞ்சலி நிகழ்வு இடம்பெற்றது.

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார்  தலைமையில் இடம்பெற்ற அஞ்சலி நிகழ்வில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செல்வராஜா கஜேந்திரன் மற்றும் தேசிய அமைப்பாளர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் சட்ட ஆலோசகர் சுகாஷ் சட்ட ஆலோசகர் காண்டீபன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.

குறித்த தேவாலய பகுதியில் நூற்றுக்கணக்கான மக்கள் உயிரில் இருந்ததை நினைவு கூர்ந்து அஞ்சலி செலுத்தப்பட்டது.