சமத்துவக் கட்சியின் அலுவலகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு (காணொளி)

17 0

முள்ளி வாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு 2020  இன்று மாலை (18-05-2020) சமத்துவக் கட்சியின் கிளிநொச்சி அலுவலகத்தில் இடம்பெற்றது.

கிளிநொச்சி நகரில் அமைந்துள்ள சமத்துவக் கட்சியின் அலுவலகத்தில் முன்னாள்  போராளி ஈழவன்  தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் பொதுச் சுடரை முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மு. சந்திரகுமார்  ஏற்றி வைத்தார். தொடர்ந்தும் ஏனைய சுடர்களும் ஏற்றி  வைக்கப்பட்டு 2009 முள்ளிவாய்க்கால் இறுதி யுத்தத்தில் கொல்லப்பட்ட மக்களுக்காக  அகவணக்கம் செலுத்தப்பட்டதோடு, மலர் அஞ்சலியும் செலுத்தப்பட்டது.

இந்த நிகழ்வில் முன்னாள் போராளிகள், பிரதேச சபை உறுப்பினர்கள், கட்சியின் செயற்பாட்டாளர்கள்  ஆகியோர் கலந்துகொண்டனர்