தமிழ் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் ஏற்பாட்டில் இடம் பெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல். (காணொளி)

22 0

தமிழ்த் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் ஏற்பாட்டில்   முள்ளிவாய்க்காலில் உயிர் நீத்த மக்களுக்கு இன்றைய தினம் திங்கட்கிழமை மன்னாரில் அஞ்சலி செலுத்தப்பட்டது.தமிழ்த்தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் தலைவர் வி.எஸ்.சிவகரன் தலைமையில், மன்னாரில் உள்ள அலுவலகத்தில் இன்று திங்கட்கிழமை காலை 10 மணியளவில் இடம் பெற்றது.

இதன் போது முள்ளிவாய்க்காலில் உயிரிழந்த மக்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் மாலை அணுவித்து,சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.குறித்த அஞ்சலி நிகழ்வில் மதத் தலைவர்கள், உள்ளுராட்சி மன்ற பிரதி நிதிகள்,மனித உரிமைகள் செயற்பாட்டளர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

தற்போதைய சூழ் நிலையை கருத்தில் கொண்டு கலந்து கொண்டவர்கள் சமூக இடை வெளியை பின் பற்றி குறித்த அஞ்சலி நிகழ்வில் கலந்து கொண்டனர்.இறுதியில் கலந்துகொண்டவர்களுக்கு உப்புக்கஞ்சி வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.