புத்தாக்க அடிப்படையிலான பொருளாதாரத்தை அடைவதே நோக்கம்-அங்கஜன்

228 0

ankajanகடந்த காலத்தில் இருந்து மீண்டு புத்தாக்க அடிப்படையிலான பொருளாதாரத்தை பெறும் எமது நோக்கத்தை அடைவதே எமது அணுகுமுறையாகும் என்று பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார்.

2017ம் ஆண்டின் வரவு செலவுத்திட்ட வாசிப்பின்போது உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் ராமநாதன், எமது தலைமைத்துவத்தின் தூர நோக்கு ஆசிய பிராந்தியத்தில் பலமான உயர் வருமானத்தை, பொருளாதரத்தை கொண்ட நாடு என்பதை பிரதிபலிகின்றது என்று கூறினார்.

நாட்டின் வரவு செலவுத்திட்டம் வெறுமனே எண்ணிக்கையல்ல ஆனால் எமது விழுமியங்கள் மற்றும் எதிர்பார்ப்புக்களை வெளிப்படுத்தி எமது நோக்கினை செயற்படுத்தும் விடையமாகும் என்று அங்கஜன் ராமநாதன் தெரிவித்தார்.

அத்துடன் பத்து இலட்சம் வேலை வாய்ப்பு வருமான மட்டம் அதிகரித்தல் மற்றும் கிராமிய பொருளாதார அபிவிருத்தி மற்றும் காணி உரிமையை உறுதிப்படுத்துதல் என்பவற்றை குறித்து நிற்கின்றது.

2016ம் ஆண்டு வரவுசெலவு திட்டத்தில் காணப்பட்ட 5.4 சதவீதத்திலும் பார்க்க  4.6  சதவீதம் பற்ராக்குறையையே 2017 ம் ஆண்டு வரவுசெலவுத்திட்டத்தில் காண முடிகின்றது.

வரவுசெலவு திட்டத்தில் குறைந்து காணப்படும் பற்றாக்குறையானது அதிகரித்து வரும் தேசிய கடன் தொகையை தாமதப்படுத்தி  கடன் தொகை மற்றும் வட்டியை செலுத்தும் தேசிய வருமானத்தில் தாக்கம் செலுத்துகிறது.

சவால்களுடனான பொருளாதாரம், அதிகமான வேலைவாய்ப்பின்மை மற்றும் மீண்டும் இலங்கையில் பொருளாதார கட்டமைப்பை இயக்குதல் என்பவற்றை மேம்படுத்தும் பொறுப்பை நோக்கமாக கொண்டு இலங்கை மக்கள் இந்த அரசாங்கத்தை தெரிவு செய்திருக்கின்றனர்.

புதிய சிறந்த எதிர்காலத்தை நோக்கி செயற்படுவதற்கான மாற்றத்தினை அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் மாண்பு மிகு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கம்  ஏற்படுத்தி வருகின்றது.

சர்வதேச மட்டத்தில் எமக்கு அளப்பரிய கீர்த்தியை பெற்றுள்ளதோடு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, சிதறிக்கிடந்த எமது சர்வதேச உறவினை மீளமைத்துளார்.

எனினும் இது முளுமையடையாவிடினும் செயற்பாடுகள் திருப்தியாகவே காணப்படுகின்றது.

என்று பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார்