போலி ஊடகவியலாளருக்கு பிணை

254 0

110331988courtsமறைந்த பண்டித் டப்ளியூ.டீ.அமரதேவவின் இறுதிக் கிரியைகளின் போது, ஊடகவியலாளர் எனக் கூறிக் கொண்டு சந்தேகத்திற்கிடமான முறையில் ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு அருகில் நின்று கொண்டிருந்ததாக குற்றம்சாட்டப்பட்டு கைதுசெய்யப்பட்ட நபருக்கு நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது.

சந்தேகநபரை 05 இலட்சம் ரூபா சரீர பிணையில் விடுதலை செய்ய கொழும்பு பிரதம நீதவான் கிஹான் பிலப்பிட்டிய உத்தரவிட்டதாக அத தெரண நீதிமன்ற செய்தியாளர் கூறினார்.

கருவாத் தோட்ட பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டிருந்த அவர், இன்று வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.

சந்தேகநபர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி அவர் மனநிலை பாதிக்கப்பட்ட ஒருவர் என கூறியதால், சந்தேகநபர் தொடர்பான உளநிலை குறித்த அறிக்கையை வழங்குமாறு நீதிபதி முன்னதாக உத்தரவு பிறப்பித்திருந்தார்.

எவ்வாறாயினும் இன்று வைத்திய அறிக்கை சமர்பிக்கப்படவில்லை என்று எமது நீதிமன்ற செய்தியாளர் கூறினார்.

எனினும் சந்தேகநபரை விடுதலை செய்த நீதவான் குறித்த வழக்கை மீண்டும்டிசம்பர் 01ம் திகதி விசாரணைக்கு எடுக்க உத்தரவிட்டுள்ளார்.