ஷஹ்ரான் பயிற்சியளித்த விடுதியை சுற்றி வளைத்த விசேட அதிரடிப் படை

275 0

மட்டக்களப்பு – காத்தான்குடி பாெலிஸ் பிரிவு, கர்பலா கடற்கரை பகுதியில் உள்ள விடுதி ஒன்று சிஐடி மற்றும் விசேட அதிரடிப் படையினரால் சுற்றிவளைக்கப்பட்டு தேடுதல் நடத்தப்பட்டு வருகிறது.

பயங்கரவாதி ஷஹ்ரான் குழுவின் மகளிர் பிரிவுக்காக இந்த இடத்தில் பயிற்சிகள் வழங்கப்பட்டதாக தற்போது கைதாகியுள்ள பெண் ஒருவர் வழங்கிய தகவலின் அடிப்படையில் இந்த தேடுதல் நடத்தப்படுவதாக சிஐடியினர் தெரிவித்துள்ளனர்.

கொழும்பில் இருந்து விசேட குழுவொன்று இதற்காக இன்று (8) காத்தான்குடி வந்துள்ளது.