சுமனரத்ன தேரருக்கு எதிராக மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு பதிவு

271 0

thero-1மட்டக்களப்பு மங்களாராம விஹாரையின் விஹாராதிபதி அம்பிட்டிய சுமனரத்ன தேரர் கிராம சேவை உத்தியோகத்தரை அச்சுறுத்தியதாக கூறப்படும் சம்பவம் குறித்து இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

நில ஆக்கிரமிப்பு பிரச்சினையொன்றை அடிப்படையாகக் கொண்டு கடந்த சில தினங்களுக்கு முன்னர் மட்டக்களப்பு மங்களாராம விஹாரையின் விஹாராதிபதி அம்பிட்டிய சுமனரத்ன, குறித்த கிராம சேவை உத்தியோகத்தரை வீதியில் வைத்து அச்சுறுத்தும் வகையிலான வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகியிருந்தன.

இதையடுத்து, இந்த சம்பவம் மக்கள் மத்தியில் பாரிய சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.
இந்த நிலையில், கொழும்பு – கிங்ஸி வீதியிலுள்ள இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவில் இன்று இந்த முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மங்களாராம விஹாரையின் விஹாராதிபதி அம்பிட்டிய சுமனரத்ன தேரர் அச்சுறுத்தல் விடுக்கின்ற சந்தர்ப்பத்தில், அதனை தடுத்து நிறுத்த பொலிஸார் தவறியமை மற்றும் அச்சுறுத்தல் விடுத்த தேரர் கைது செய்யப்படாமை உள்ளிட்ட விடயங்களை சுட்டிக்காட்டி இந்த முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதாக சட்டத்தரணி டொமினிக்  தெரிவித்தார்.