தெலுங்கானா மாநிலம் – போராட்டம் கலவரத்தில்

2933 16

telunganaஇந்தியாவின் தெலுங்கானா மாநிலத்தில் உள்ள வாரங்கல் மாவட்டத்தை இரண்டாக பிரிக்க வலியுறுத்தி மேற்கொள்ளப்பட்டிருந்த ஆர்ப்பாட்டம் ஒன்று கலவரமாக மாறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கலவரத்தில் அரச பேருந்துகளும் காவல்துறை வாகனங்களும் தீ மூட்டப்பட்டுள்ளன.
தெலுங்கானா மாநிலத்தில் உள்ள 10 மாவட்டங்களை பிரிக்க அந்த மாநில அரசு முடிவு செய்துள்ளது.
இதற்கான பணியில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
வாரங்கல் மாவட்டத்தில் உள்ள ஜனகாமா பகுதியை தனி மாவட்டமாக அறிவிக்குமாறு வலியுறுத்தப்பட்டு பல ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.
இந்தநிலையில் நேற்று முன்னெக்கப்பட்டிருந்த ஆர்ப்பாட்டம் கலவரமாக மாறியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave a comment