ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் தபால் சேவை இடம்பெறாது!-ரஞ்சித் ஆரியரத்ன

292 0

சிறிலங்காவின் கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களில் எதிர்வரும் 4ஆம் திகதி ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்பட்டுள்ளதன் காரணமாக குறித்த பகுதிகளில் தபால் நிலையங்கள் திறக்கப்பட மாட்டாது என தபால்மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன தெரிவித்துள்ளார்.

ஊரடங்கு தளர்த்தப்படும் பகுதிகளில் பொதுவாக தபால் நிலையங்கள் திறக்கப்படும் எனவும் அவர்  குறிப்பிட்டார்.

இதேவேளை, இடர் வலயங்களாக அடையாளப்படுத்தப்பட்டுள்ள மேல்மாகாணம் மற்றும் புத்தளம் மாவட்டங்கள் தவிர்ந்த ஏனைய மாவட்டங்களில் தபால் சேவைகளை முன்னெடுப்பது தொடர்பில் இன்றைய தினம் தீர்மானமொன்றை மேற்கொள்ளவுள்ளதாக அஞ்சல் தொழிற்சங்க கூட்டணி தலைவர் சிந்தக பண்டார  தெரிவித்தார்.

தபால் நிலையங்கள் மற்றும் உப தபால் நிலையங்களுக்கு தேவையான தொற்று நீக்கிகள் மற்றும் ஊழியர்களுக்கான சுகாதார பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாத காரணத்தினால் குறித்த தபால் சேவை நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாது என ஏற்கனவே குறித்த சங்கம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.