வட தமிழீழம் யாழ்ப்பாணத்தில் பாணின் விலை அதிகரிப்பு!

31 0

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 450 கிராம் எடைகொண்ட பாண் ஒன்றின் விலையை 3 ரூபாயால் அதிகரிக்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

நேற்று நள்ளிரவு முதல் அதிகரிப்பதற்கு இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.
கோதுமை மாவுக்கு பிறிமா நிறுவனத்தால் வழங்கப்பட்ட 3 ரூபாய் விலைக்கழிவு இடைநிறுத்தகப்பட்ட நிலையில் இந்த அனுமதி யாழ்ப்பாணம் மாவட்டச் செயலாளரால் வழங்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் யாழ்ப்பாணத்தில் 450 கிராம் எடைகொண்ட பாண் ஒன்றின் விலை 63 ரூபாயாக அதிகரிக்கப்படவுள்ளது.

இறக்குமதி செய்யப்படும் மாவின் விலை அதிகரித்தமையாலும் பாண் உற்பத்திக்கான உப மூலப்பொருள்களின் விலை சடுதியாக அதிகரித்தமையாலும் யாழ்ப்பாணத்தில் பாணின் விலையை அதிகரிக்க அனுமதியளிக்கவேண்டும் என்று யாழ்.மாவட்ட பேக்கரி உரிமையாளர் சங்கம், யாழ். மாவட்டச் செயலாளரிடம் கோரியிருந்தது.

இந்த நிலையில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 450 கிராம் எடைகொண்ட பாண் ஒன்றின் விலை 3 ரூபாயால் அதிகரிக்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது.