இன்றைய உழைப்பாளிகள் மருத்துவப்பணியாளர்களே!

227 0

உழைப்பாளர்கள் தினம் உலகம் முழுவதும் ஆண்டுதோறும் கொண்டாடப்படும் தினமாகும் . உழைப்பாளர்களை கௌரவிக்கும் முகமாகவும் தொழிலாளர்கள் தங்களது உரிமைகளை மீ்ட்டெடுத்த நாளாகவும் கொண்டாடப்படுகின்றது.

நாளொன்றுக்கு பதினெ்ட்டு மணி நேரம் வரை தொழிலாளர்கள் கட்டாயப்படுத்தி வேலை வாங்கப்பட்டனர். இதனால், கொதித்தெழுந்த தொழிலாளர்கள் முதன் முதலாக 1806-ம் ஆண்டு அமெரிக்காவிலும், ஆஸ்திரேலியாவிலும் நாளொன்றுக்கு பத்து மணி நேரம் வேலை கேட்டு எழுப்பிய உரிமைக்குரல் அன்று அடக்கப்பட்டது.

1886-ம் ஆண்டு மே முதலாம் திகதி ஒன்று பட்ட வேலை புறக்கணிப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அந்த போராட்டத்தில் தொழில் பெரும் நகரங்களான நியூயார்க், சிகாகோ, பிலடெல்பியா, சின்சினாட்டி, பால்டிமோர் என பெரும்பலான அமெரிக்க நகரங்களில் எட்டு மணிநேர வேலை உள்ளிட்ட பல்வேறு உரிமைகளை முன்னிறுத்தி உழப்பாளிகள் தமது உரிமைக்கான குரலை எழப்பினார்கள். .அந்த தொடர் போராட்டத்தால் அமெரிக்க அரசு 1890-ம் ஆண்டு உழைப்பாளிகள் கோரிக்கைகளை ஏற்று பணிந்தது கொண்டது.

இதன் பயனாக ஒரு நாளின் வேலை நேரத்தை எட்டு மணி நேரமாக குறைத்ததுடன் வாரம் ஒருநாள் விடுமுறையும் உலகெங்கும் நடைமுறைப்படுத்தப்பட்டது. உலக உழைப்பாளர் தினத்தில் அனைத்து உழைப்பாளிகளும் மதிப்பளிக்கப்படுவது வழமை. அதுவே நம் கடமை. ஆனால் இவ் வருடம் சிறப்பாக உலகெங்கும் தலைவணங்கி மதிப்பளிக்கப்படுகிறார்கள் மருத்துவ பணியாளர்கள் மற்றும் எல்லா நாட்டு காவல் துறையும் பாதுகாப்பு படையினரும் .

கொவிட்-19 நோய் தொற்றுக்கு எதிராக போராடும் அனைத்து ஊழியர்களும் வணக்கத்திற்கு உரியவர்களே .

போராடி பெற்றெடுத்த எட்டு மணிநேர வேலையை இன்று இருபத்தி நாலுமணி துளிகளும் தமது
சேவையாக , உயிரை துச்சமென மதித்து கொவிட்-19 நோயாளர்களை காப்பாற்ற போராடிக்கொண்டிருக்கும் மருத்துவர்கள், தாதிமார்கள், மருத்துமனை பணியாளர்கள் அனைவரையும் உலகெங்கும் உள்ள மனித குலம் எழுந்து நின்று உழைப்பாளின் நாளில் தலைவணங்கி நிற்கின்றது.

 
 Great Salute to all the tireless workers.