துருக்கியும் இணைந்து செயல்பட வேண்டும் – அமெரிக்கா

3436 0

oka_miniஐ.எஸ்.ஐ.எஸ் இஸ்லாமிய தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகளில் துருக்கியும் இணைந்து செயல்பட வேண்டும் என அமெரிக்கா வலியுத்தியுள்ளது.
துருக்கியில் இடம்பெறும் பல்வேறு ஐ.எஸ்.ஐ.எஸ் தாக்குதல்களின்போது பாரிய இழப்பினை துருக்கியர் எதிர்கொண்டனர்.
கடந்த ஒக்டோபர் மாதம் துருக்கிய தலைநகர் அங்காராவில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த சமாதான பேரணியை குறிவைத்து மேற்கொள்ளப்பட்ட தாக்குதலின் போது 95 துருக்கிய பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.
இதேவேளை துருக்கிய இஸ்தான்புல் சர்வதேச வானூர்தி நிலையத்தில் இடம்பெற்ற பாரிய மனித படுகொலையின் பின்னணியில் இருந்தவர் வட ரஷ்ய கௌகசுஸ் பிராந்தியத்தை சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இவர் முன்னர் ஐ.எஸ்.ஐ.எஸ் யுத்த படையணியை சேர்ந்தவர் என அமெரிக்க புலனாய்வு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Leave a comment